Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2012-09-07T18:18:00+02:00

உனக்காக-3

Posted by கண்மணி.....

உனைக்காணா நாட்கள்

நிமிடங்களாய் கடக்கின்றன….

அந்நிமிடங்கள் அனைத்தும்

யுகங்களால் செய்யப்பட்டவை….

 -oO0Oo-

 

துவைக்கையில் தொலைந்த

மோதிர தேடல் பறையறைந்தது

பசலையின் உடல் மெலிவை…..

-oO0Oo-

 

கனவு கலைத்த பின்னிரவுகளில்

தனிமையின் பாலைவனமெங்கும்

கால்நோக சுற்றி அலைந்து

களைத்து கண் மூடுகிறேன்

தனிமை இப்போது

கனவுக்குள் நுழைந்துவிட்டிருந்தது….

-oO0Oo-

 

எடுத்த புகைப்படமெல்லாம்

எடுப்பாய் இருந்த போதும்

ஏதோ குறைவதாய் உணர்கிறேன்

என் தோள் சேர்த்தணைத்த

உன் கையாய் இருக்குமோ?

-oO0Oo-

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2012].
All rights reserved

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
காணாத போது<br /> கனவுகள்<br /> <br /> இல்லாத போது<br /> இனிய சோகங்கள்
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog