Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2012-11-02T09:12:00+01:00

உனக்காக - 4

Posted by கண்மணி.....

கன்னத்தில் கை வைத்து

கண்கள் சிரிக்க எனை பார்க்கிறாய்

ரசிப்பதாய் கூறிக்கொண்டு….

ரசிப்பது நான் தானென

ரகசியம் சொன்னது காதல்….

 /*/*/*/*/*/*/*/

 

எனக்கும் சேர்த்து

நீ சிந்திக்கிறாய்…

என் சிந்தனையெல்லாம்

‘நீ’ மட்டும் தான்….

/*/*/*/*/*/*/*/

 

நீ எதிர்பார்த்ததை

நான் சொல்லும்போது

உன் காதலும்

நான் எதிர்பாராததை

நீ சொல்லும்போது

என் காதலும்

மாலையிட்டு மகிழ்கின்றன

நம் காதலோடு….

/*/*/*/*/*/*/*/

 

நகம் கடிக்கும்போதெல்லாம்

நெஞ்சுக்குள் இடித்துரைக்கிறாய்

உன் உரிமையை தட்டிப்பறிப்பதாய்….

/*/*/*/*/*/*/*/

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2012].
All rights reserved

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
காதல் வரிகள்<br /> காணாத போது இனிக்கும்
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog