இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?
மதம் இனம் மொழி
மற்றெதுவும் கடந்து
மனதை மட்டுமே மையமாய்
அன்பை மட்டுமே
ஆணிவேராய் கொண்டு
மலர்வதே காதல் என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?
கட்டிவைக்கும் பூவும்
காலில் ஆடும் கொலுசும்
இட்டு வைக்கும் பொட்டும்
இன்னும் இருக்கும் உயிரும்
காதலனுக்கு மட்டுமே
கண்டவனுக்கு இல்லை என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?
மனதில் ஒருவனை
சுமந்திருக்க
மற்றவன் வந்து
மணம் முடிக்க
பார்த்து செல்வது
மரணித்துக் கொண்டிருக்கும்
மலரின் மீது
மண்ணெண்ணெய்
ஊற்றுவதுபோல் என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved