என்னவனே.....
உன்னை எனக்கு தந்த
நிம்மதியில் போய்விட்டாய் நீ....
கணிசமாய் நினைப்பதாயும்
கனவில் என்னோடு வசிப்பதாயும் கூறி....
என் நடைமுறை வாழ்கையின்
நிலைமை அறிவாயா நீ?
உன்னை தவிர
அனைவரின் மத்தியிலும்
அகதியாய் நான்....
நீ
தீண்டிய இடங்கள்
தீயாய் தகிக்கின்றன...
உன் பெயர்
துண்டு துண்டாய் வந்து
தொண்டை குழியை
ரணமாக்குகிறது.....
நீ பதித்த
முத்த முத்திரை
உதட்டை விட்டு
உள்ளத்தை முற்றுகையிட்டது.....
உன் நினைவிலேய
அமிழ்ந்து திளைக்கிறேன்,
கனவில் மிதப்பதாய்
கண்டவர்கள் நினைப்பு....
உன்
இறுக்கமான அணைப்பிற்கு பிறகு
கணிசமாய் தளர்ந்துவிட்டேன்
நான்.....
பிரிந்திருக்கும்
நாட்களை எண்ணி
மரித்துக்கொண்டுள்ளேன் நான்.....
நீயோ,
இணைந்திருந்த தருணங்களால்
இன்பத்தில் ஜீவிக்கின்றாய்.....
நானோ,
பிரிவென்ற நோயினால்
பித்து பிடித்தவளானேன்....
வா...
விரைவில் வா....
கால களிம்பு
என் காதல் ரணங்களை
குணமாக்குமுன் வா....
மறுபடியும் புண்ணாக்கிவிட்டு போ.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.