எண்ணத்தின் வெளிப்பாட்டில்
வார்த்தை விளையாடுவது
கவிதை.....
மனதின் மூலையில்
மௌனம் பேசுவது
கவிதை....
கண்களின் கண்ணீரிலும்
காவியம் காண்பது
கவிதை.....
குழந்தையில் குதூகலத்தில்
குடும்பம் மகிழ்வது
கவிதை.....
இறுதியாக,
இன்னும் என்னை
இறுக்கி பிடித்து
இறக்காமல் வைத்திருப்பது
கவிதை....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.