Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-04-25T09:58:00+02:00

(காமம் உரைத்தல் காரிகைக்கு அழகன்று....)

Posted by கண்மணி.....
முதல் முதலாய்
என்னை துன்பப்படுத்து.....

முழுவதுமாய்
என்னை இன்பப்படுத்து.......

மெல்லமாய் தழுவு.....
கள்ளமாய் சிரி.....
வெள்ளமாய் அணை....

உதடுகள் வேர்க்கும் வரை
உயிரை பருகுவோம்.....

உடல் ஓயும் வரை
உள்ளம் உருகுவோம்.....

ஒட்டு மொத்தமாய்
முத்தம் பரிமாறிக் கொள்வோம்.....

ஒன்றோ இரண்டோ
மிச்சம் வைப்போம்
நம் குழந்தைகளுக்கு.....

வண்ணம் தீட்டாத
ஓவியமாய் கிடக்கிறேன்.....

வந்து உன் நா தூரிகையால்
வண்ணமிடு.....

சீக்கிரமே வந்து சேர்ந்து கொள்.....
இல்லை,
சீக்கிரமே வாடிப் போகும் பூவுடல்....

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
வண்ணம் தீட்டாத
ஓவியமாய் கிடக்கிறேன்.....///

/// உங்கள் எண்ணங்களினால்
எவர் எண்ணமும்... வண்ணம் தீட்டப்படும்!

மிக அழகான வரிகள் :)
Reply

nandri nanba

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog