நினைக்காத நாளில்லை.....
நான் உன்னை.....
நீயோ என்னை
நினைக்கவும் தயாரில்லை....
என் கேள்விகளுக்கெல்லாம்
மௌனத்தையே பரிசளித்தாயே.....
நான் மௌனமாகும் போது மட்டும்
ஏன் கண்ணீரை பரிசளிக்கிறாய்....?
உன்னை கண்டு
மெய் சிலிர்க்கும் எனக்கு....
என்னை கண்டாலே
பொய் சிரிக்கும், உனக்கு.....
உன்னை தீண்டினால்
தேன் சுரக்கும் எனக்கு.....
என்னை தீண்டினால்
தீ தகிக்கும் உனக்கு......
எனினும்
உயிரே ,
காதலை கற்று தந்து
உண்மையை உணர செய்த்ததற்காகவே
உன்னையே காதலிக்கிறேன்.....
நீ என்னை காதலிக்காவிட்டாலும்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.