எனக்கு
உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’
என்கிறாய்.
எனக்கும்தான்
உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!
* கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து
தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான்
கவிதையெழுதுகிறேன்.
* கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள்!
* நீ கையொப்பமிட்டு
தரும் எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
* இப்படி வாசிக்க…
ஆயிரம் கவிதைகள்
இருக்கின்றன.
நேசிக்க…நீ மட்டும்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.