வெக்கங்கெட்ட தமிழா.....
உன் வேட்டியை
வேறொருவன் பிடுங்கினாலும்
வேகம் வராதா உனக்கு?
மானங்கெட்ட தமிழா, உன்
மனைவியின் மாராப்பை
மற்றொருவன் இழுத்தாலும்
மானம் சுடாதா உனக்கு?
உன் இனம்
உருத்தெரியாமல் அழியுதடா
உன் பாதம் கீழே....
ஈ காக்காய் கூட
இனிதாய் வாழும்
ஈழ மண்ணில்,
உன் இனமே
இடிந்துபோகிறதே.....
நீயோ
உலக அழகியின்
உடையலங்காரத்தில்
உன்னை மறக்கிறாய்.......
மட்டை பந்தின்
மயக்கத்தில்
மனம் இழக்கிறாய்.....
அரசியல்வாதியின்
அஞ்சுக்கும் பத்துக்கும்
ஆளாய் பறக்கிறாய்.....
உனக்கு என்று
உணர்வு வருமோ.....
ஈழத்தில் என்று
இன்பம் வருமோ......
ச்சீ....
தமிழனும் நீயோ.....
தமிழ்நாடும் உனதோ......
உன்னை எண்ணியோ யாம் மானம் காத்தோம்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.