டேய்
திமிரெடுத்தவனே..........
என்
திமிர் எடுத்தவனே........
டேய்
என்மேல்
பைத்தியம் பிடித்தவனே........
என்னை
உன்மேல்
பைத்தியமாக்கியவனே......
எனக்கு தெரிந்த மழை
உன் கவிதை
எனக்கு தெரிந்த மலை
உன் மார்பு
எனக்கு தெரிந்த தென்றல்
உன் புன்னகை.....
எனக்கு தெரிந்த புயல்
உன் கோபம்.....
எனக்கு தெரிந்த வானம்
உன் கண்கள்.....
எனக்கு தெரிந்த தண்டனை
உன் மௌனம்....
எனக்கு தெரிந்த பரிசு
உன் முத்தம்......
எனகேற்றவனே,
என்னை ஏற்றவனே,
எனக்கு தெரிந்த நான் நீ தான்.....
என்னை உனக்கு ஏன் தெரியவில்லை?
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.