காதல் எனப்படுவது யாதெனில்...
இன்றளவும்
எனக்கு கிடைக்கபெறாத ஒன்று.
நாளையே கூட நீ வரலாம்..
உன்னிடம்
செல்லமாய் சீண்டியும்
ஒரு முத்தத்திற்கு கெஞ்சியும்
விளையாட வேண்டிய நேரமிது..
பெட்டி தட்டி கொண்டும்
ஆணிகள் பிடுங்கி கொண்டுமிருக்கிறேன்..
எங்கிருக்கிறாய் நீ??
நீ
வரும் வரை
கவிதை எழுதியே
காலம் தள்ளவேண்டும் போலிருக்கிறது..
நீ வந்து விடு..
கவிதைகளை மூட்டை கட்டிவிட்டு
காதலிக்கலாம்..
படுக்கையில் வீழ்ந்ததும்
நீ வந்து விட்டதாயும்
என் காதலை ஏற்று கொண்டதாயும்
கற்பனை செய்து கொண்டே
தூங்க ஆரம்பிப்பேன்..
கனவில் நீ வந்து காதலிக்க ஆரம்பிப்பாய்..
நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே..
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.