என்னை செலவழித்து
நான் உன்னை
வாங்கும் போதெல்லாம்,
என்னை சேமித்து
நீ காதல் வாங்கிக் கொள்கிறாய்......
என்னை தொலைத்து
நான் உன்னில்
தேடும் போதெல்லாம்,
என்னை கண்டெடுத்து
நீ உனக்கே வைத்துக் கொள்கிறாய்.....
என்னை இழந்து
நான் உன்னை
பெரும் போதெல்லாம்,
என்னை பெற்று
நீ எனக்கு தாயுமாகிறாய்.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.