Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2009-09-30T14:00:00+02:00

காதல் துளிகள்.....

Posted by கண்மணி.....

உன்னை முதலில்
பார்த்த அன்று
கதவிடுக்கின் ஓரத்தில்
நீ வீசிய
ஒற்றைப் பார்வையில்
கண்டுகொண்டேன்
எனக்கான உன்
வாழ்நாள் காத்திருப்பை.....

இன்னும்
இரண்டாயிரம்
ஆண்டுகள் ஆயினும்
இறக்காமல்
இருக்கும்
இதழால் நீ சிந்தி
இதயத்தில் நான் ஏந்திய
உன் முதல் புன்னகை.....

இதோ,
இங்கு தான்....
இங்கே தான்....
நீ உன்
கொலுசை தொலைத்த
இந்த இடத்தில தான்
இன்னும் என்
இதயத்தை நான்
தேடிக் கொண்டிருக்கிறேன்.....

உன் கொலுசு
என்னிடம் கிடைத்தால்
உன்னிடம் தந்துவிடுகிறேன்.....

என் இதயம்
உன்னிடம் கிடைத்தால்
தொலைத்துவிடு உனக்குள்ளே.....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
B

I appreciate your work keep it up!

Reply
W

quite interestng to knwo keep sharing.

Reply
L

Quite interesting! hope to have somem ore good stuff here!

Reply
S

very cool and nice

Reply
C

This is a nice addition to my collection of 100 best articles. I like the spirit. Will also share it with my friends and business associates. By Matt, Corporate Logo Design Critic and Article
Collector, Miami, FL.

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog