Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-11-07T10:27:00+01:00

நமக்கெதற்கு வார்த்தை?

Posted by கண்மணி.....

தூறல் போடும் நேரம்
எதிர் எதிராய் ரயிலில்
சைட் லோவரில்
நீண்ட நேரம்
நீயும் நானும்....

நான் பேசுவேனென
நீ முகம் பார்த்தாய்....

நீ பேசுவாயென
நான் மண் பார்த்தேன்....

மழையனுப்பி நம்மை
வேடிக்கை பார்த்தது
காதல்....

நமக்கெதற்கு வார்த்தை?
நாம் பேசுவதை தான்
நமக்காக மழை பேசுகிறதே....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
J
<br /> nalla varnanai!!!<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog