நீ
சத்தமாய்
சிரிக்கும் போது
இடி கூட
சங்கீதமென இசைக்க
இசைந்து கேட்கிறேன்.....!
நீ
மென் புன்னகை
புரியும் போது
மின்னலின்
மெல்லிசையில் மனம்
மயங்கி நிற்கிறேன்.....!
நீ
கோபம் கொண்டு
முறைக்கும் போதோ
கொஞ்சும் கடல்
கொந்தளிப்பது கண்டு
கலங்கி போகிறேன்....!
என்
கால நிலையை
கண்டபடி
மாற்றி விளையாடும்
கவிதை காதலியே......
கல்லறைக்குள்
நான்
காணாமல்
போகும் போதாவது
இரு துளி
கண்ணீர் சிந்து.....
உன் விழி நீர்
மழையில் நனைந்து
நான்
கனவுகளோடு
கைகோர்த்து
கண்மூடி இருப்பேன்
காதல் இருக்கும் வரை....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.