தோற்பது உறுதி
என தெரிந்தும்
கடைசி பந்து வரை
விளையாடும்
வீரன் போல் தான்
உன்னைக் காதலிக்கும்
நானும்.....
~~~~~~~~~~~~~~~~~~~~
உன் புன்னகைக்கு
உலகத்தையே
உயில் எழுதி தரலாம்....
என் உலகமே நீதானே
உன்னை உனக்கே
எப்படி தருவது?
~~~~~~~~~~~~~~~~~~~~
"உன் பார்வை
என்ன பேசுகிறது?"
என்பதை என்னால்
கூற முடியாது.....
ஆனால்
"அது பேசுகிறது"
என்பதை என்னைத் தவிர
யாரும் கூற முடியாது......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு
எதிரி என்று
எவருமில்லை
ஓரிரு நொடி
உன்னைக் காண
தடை செய்யும்
என் இமை தவிர.....
எனக்கு
நண்பன் என்று
எவருமில்லை
உன் பிம்பத்தை
விழிக்குள் பூட்டி
சிறைவைத்துக் கொள்ளும்
என் இமை தவிர......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.