நீ
பேசும்
எந்த மொழியும்
என் தாய் மொழியே...!
நீ
வசிக்கும்
எந்த நாடும்
என் தாய் நாடே....!
நீ
பழகும்
எந்த இனத்தவரும்
என் உடன்பிறப்புக்களே....!
நீ
நடக்கும்
எந்த பாதையும்
என் மோட்சமே.....!
நீ
சிரிக்கும்
எந்த நேரமும்
என் விடியலே...!
நீ
ரசிக்கும்
எந்த கவிதையும்
என் கீதையே....!
நீ
கொஞ்சும்
எந்த குழந்தையும்
என் ரத்தமே....!
நீ
மகிழும்
எந்த நாளும்
என் திருநாளே....!
நீ
வருந்தும்
எந்த தருணமும்
என் மரணமே.....!
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.