மனசுல ஒன்ன வச்சேன்- உம்ம
உசுருல என்ன வச்சேன்
கைல கைய வச்சு- எனக்கு
காதல சொன்ன மச்சான்....
வாங்கி வந்த மல்லியப்பூ
வாசம் இன்னும் நிக்குதைய்யா.....
வீதியில வாரதெல்லாம்
உம்மொகமா தெரியுதைய்யா.....
கஞ்சி தண்ணி கொறயில்ல
காசு பணம் கொறயில்ல
நெஞ்சு செத்து போச்சே - ஐயா
நீ போன பின்னாலே.....
தொட்டு தந்த குங்குமத்த
பொட்டா தெனம் வச்சுகிறேன்
காட்டு பாத போறதுக்குள்ள- வந்து
காட்டிப்புடு உம்மொகத்த.....
நெனப்புல வாழ்ந்திருக்கேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு.....
நெசமா உன்ன பாத்தா - மனசு
நெறஞ்சு, நிக்கும் எம்மூச்சு......
பட்டு துணி தேவையில்ல
நட்டு நக தேவையில்ல
கோடி துணி நீ தந்தா - ஓடி
சொர்கஞ்சேரும் ஏன் உசுரு.....
பட்டாளத்துக்கு போறப்போ
பாத்து போ னு அனுப்பிவசேன்
பாவி மக போகும் போது - நீ
பாக்கவாது வருவியா?
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.