Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-12-15T12:21:00+01:00

என் காதல்.....!

Posted by கண்மணி.....

நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவளை காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
R

orru thalai kathal ... good touching...

Reply
S

நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!
// யாராவது மாங்காய திண்ணு போட்டுருபாங்க

நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!
// அட நல்ல இருக்கே...

நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!
// இல்ல இன்னும் இம்ப்றுவ் பண்ணனும் ... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

நீ உன்னவளை காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!

//ஹார்ட் டச்சிங்...

Reply
T

அருமை..!

Reply
J

very nice....sollaamal sarugai pona kaathal!!!

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog