'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க'னு
நான் சொன்னதுக்கு
'பொய் சொல்லாத'னு
சிணுங்கியவளே...!
நான் சொல்வதெல்லம் உண்மை
உண்மை தவிர வேறில்லை ....
நான் பொய் சொன்னால்
முரைத்து பார்க்கும் போது
எவ்வளவு அழகு தெரியுமா
நீ
நான் மழையில் நனைந்தால்
திட்டியபடியே துவட்டும் போது
என் தாயை விட அழகானவள்
நீ
நான் கடித்த மாங்காய் கேட்டு
என்னிடம் சண்டை போடும் போது
என் தங்கையை விட அழகானவள்
நீ
எனக்கு குளிரும் தருணத்தில்
உன் உடலது கொண்டு
என் மெய்யது தழுவி தூங்கும் போது
என் கவிதையை விட அழகானவள்
நீ
என்னைக் காணாது தேடி
கண்டதும் கட்டியணைத்து
என் மார்பில் முகம் புதைக்கும் போது
உன்னை விட அழகானவள்
நீ
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.