என் காதல்
அலை வீசும் போது
கடலாய்
உன் மௌனம்....
என் கற்பனைக்
குதிரை பறக்கும் போது
கடிவாளமாய்
உன் மௌனம்....
என் இளமைத்
தென்றல் வீசும் போது
நாணலாய்
உன் மௌனம்......
என் மோகத்
தீ எரியும் போது
நீராய்
உன் மௌனம்.....
என் இரவுத்
தேர் ஓடும் போது
கனவாய்
உன் மௌனம்....
என் வாழ்க்கை
கதை சொல்லப்படும் போது
அர்த்தமாய்
உன் மௌனம்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.