மௌனமாய்
கழிகின்றதென்
நாட்கள்......
கண் விழிக்கிறேன்
காணவில்லை
உன் காலடி சுவடு......
காது தீட்டுகிறேன்
கேட்கவில்லை
உன் கொலுசொலி.....
அறையெங்கும் அலைகிறேன்
அகப்படவில்லை
உன் அழகு முகம்....
வீடு முழுதும் தேடுகிறேன்
விரலருகே இல்லை
உன் வெட்க புன்னகை....
போய்விட்டாய்...
போயேவிட்டாய்....
போகும்போது
என் நினைவு பெட்டகத்தில்
குரலை மட்டும் பதித்துவிட்டு
போயிருக்கலாம்....
மௌனத்தின்
இரைச்சலில்
மனம் கசிந்து
உயிர் உருகி
உருகுலைகிறது
வாழ்வு...
எதுவும்
என்னவோ செய்யவோ
ஏலாமல்,
மௌனமாய்
கழிகின்றதேன்
நாட்கள்.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.