Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-04-05T12:57:00+02:00

காதல் தேர்தல்

Posted by கண்மணி.....

காதல் தேர்தலில்
கண்கள் சின்னத்தில்
பார்வை வீசியே
ஓட்டு கேட்டாய்.....

முடிந்ததும் தருவதாக
முத்த வாக்குறுதிகள்
அள்ளி வீசினாய்....

தேர்தல் அன்று
தேவதையாய்
தரிசனம் தந்தாய்.....

தெரியாமலே போனது,
தேர்தலில் வெற்றி பெற்றதும்
தொகுதி பக்கமே நீ
தோன்ற போவதில்லை என்று....

அறிவுள்ள
அரசியல்வாதியாய் நீ
அமெரிக்க மாபிள்ளையை
அடைக்கலம் புகுந்தாய்....

அப்பாவி
குடிமகனாய் நான்
அடுத்த தேர்தலில்
ஓட்டு போடுவேன்
உதட்டு சின்னத்தில்....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

அப்பாவி
குடிமகனாய் நான்
அடுத்த தேர்தலில்
ஓட்டு போடுவேன்
உதட்டு சின்னத்தில்....//

கலக்கல் வரிகள் :)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog