Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-05-03T17:22:00+02:00

மலர்ந்த காதலும் மறைந்த நட்புகளும்....

Posted by கண்மணி.....

அழகான அந்திப் பொழுதில்
ஆனந்தமாய் ஆர்பரித்த நிலையில்,
எனக்கு 'அண்ணா'வும்
உனக்கு 'மச்சி'யுமான
நண்பனொருவன்
அறிமுகப்படுத்தினான்
நம்மை நமக்கு....!

இதமான நட்பு
இயல்பாய் வளர்ந்தது...
இருவரும் பேச பேச
இன்னும் இன்னும் வளர்ந்தது.....

கடலின் அலையும்
காலடி மணலும்
கண்ணதாசன் வரியும்
கல்கி எழுத்தும்
இணைந்தே ரசித்தோம்....
இன்பமாய் ரசித்தோம்....

நல்லதொரு நாளில்
நவின்றாய் "காதல்" என்று.....
நாணத்தோடு உரைத்தேன்
நானும் "ஆம்" என்று....

தோழியர் பொறாமைப்பட்டனர்
நான் பெருமைப்பட்டேன்....
தோழர்கள் விலகி நின்றனர்
நானோ விட்டுவிட்டேன்....

ஆற்று நீர் கிணற்று நீரானது....
அர்த்தமற்ற கோபம்
என் கண்ணின் நீரானது....

சேர்ந்தே முடிவெடுத்தோம்...
பிரிந்து போவதென... காதலை
மறந்து போவதென....

'மச்சி' களும்
'மாப்பி' களும்
அப்படியே இருந்தனர்...
உனக்கு....
ஆறுதல் சொல்லவும்,
'அஞ்சல' பாடவும்...

எனக்கு?

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
N

very nice.. :)

Reply
V

nice. it's real.

Reply
M

Dinner saapdaren da naan seriya.. un kavithai padichukittu pc.. Un kavithai pola unavu romba rusikkuthu nu nenachen.. current pochu appo saapta appothaan therithu rusichathu un kavithaiyal en unavu

Reply
V

super kavithai...:)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog