உன்னிடம்,
உள்ளம் உரைத்த நாள் முதல்....
இருக்கிறேன்...
அவ்வளவு தான்...
உயிருடனா? தெரியவில்லை....
இரவின் இருளை
இம்சையோடு ரசிக்கிறேன்...
விடியும் பொழுதில்
விட்டத்தை வெறிக்கிறேன்....
தூங்குவதாய் நினைக்கிறன்...
நினைவை தூங்க வைக்கிறேன்...
சிரிப்பதாய் நம்புகிறேன்...
நம்பிக்கை எண்ணி சிரிக்கிறேன்...
தினமும் நகமிழக்கிறேன்.....
மனமும் பரிதவிக்கிறேன்....
கூட்டத்திலும் தனிமை உணர்கிறேன்....
வலியிலும் இனிமை உணர்கிறேன்....
பிடித்தவர்களை தூஷிக்கிறேன்....
பிடிக்காதவர்களையும் நேசிக்கிறேன்....
காலநேரம் மறந்து ஓடுகிறேன்....
காலடியோசை மட்டும் தேடுகிறேன்....
உன் மௌனத்தால் மரிக்கிறேன்...
உன் புன்னகையால் பிழைக்கிறேன்...
பொட்டிடும் போதும் தேடுகிறேன் - உன்னை
கட்டிக்கொள்ளவே நாடுகிறேன்...
உன்னை காணாமல் வாடுகிறேன் - என்
உள்ளம் நானே மூடுகிறேன்....
உயிர் இருப்பதை மறக்கிறேன்...
உணவும் நீரும் மறுக்கிறேன்....
உடலே வேண்டாம், துறக்கிறேன்....
உள்ளம் துடிப்பதை வெறுக்கிறேன்...
உன்னிடம்,
உள்ளம் உரைத்த நாள் முதல்....
இருக்கிறேன்...
அவ்வளவு தான்...
உயிருடனா? தெரியவில்லை....
உடனே இங்கே வந்துவிடு...
காதலை மட்டும் தந்துவிடு....
'இல்லை'யென்றாலும் சொல்லிவிடு....
சொன்னவுடனே கொன்றுவிடு....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.