Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-05-21T07:45:00+02:00

மனதெல்லாம் மழைக்காலம்....!

Posted by கண்மணி.....

மழை....
என் காதலி....
நீ வரும் வரை....

ஒவ்வொரு முறையும்
முதல் துளி
முத்தம் தந்து
வரவேற்பாள்
கண்ணுக்குள்....

குடை தடை மீறி
காதில் காதல் கூறி
என்னைத் தொடவே
விண்ணை துறப்பாள்....

மொட்டு மலர்வது போல
மௌனமாய் மலர்ந்தது
அவளுக்கான என் காதல்...

உன்னைக் காட்டியதும்,
உனக்கு
என்னை காட்டியதும்
அவளே தான்....

புன்னகை
மின்னலை
இதழில் கண்டேன்....

வெட்க
வானவில்லை
விழியில் கண்டேன்....

'அவள் தான் நீயோ?'
அச்சம் தோன்றும்....

'ஆமாம்' தெளிந்தபின்
மிச்சம் தோன்றும்....

அன்பு சாரலில்
ஆசை தூரலில்
காதல் மழையில்
கனவு கடலில்
நனைந்தே நின்றோம்....
நினைவை வென்றோம்...

உன்னோடு
அவள் வரும் காலம்
விழாக்காலம்....

அவளோடு
நீ வரும் காலம்
காதல் காலம்...

என் கனவு ராட்சசியே...!
நெஞ்சோடு
உன் நினைவால்,
மனதெல்லாம்
மழைக்காலம்....!

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog