காதலே....
அழைக்காமல்
வாழ்வில் வருகிறாய்...
ஆசைக்கனவு
ஆயிரம் தருகிறாய்....
நிஜ வாழ்வில்
நானிழந்த அனைத்தையும்
நினைவில் கிடைக்கச் செய்கிறாய்...
நினைவில்
நிகழ்ந்த அனைத்தும்
நிஜமாய் கிடைக்காதென்கிறாய்....
நடக்காததை நடத்திக் காட்டுகிறாய்...
நடந்ததை நீக்கிக் காட்டுகிறாய்....
கடந்த காலத்தை
கடனாய் கழிக்கிறாய்....
வரும் காலத்தை
வட்டியாய் கேட்கிறாய்....
நான் வேண்டாமென
ஒதுக்கி வைப்பதை,
வேண்டுமென்றே எடுத்து தருகிறாய்....
நான் வேண்டுமென
நினைத்து பார்ப்பதை
வேண்டாமென பதுக்கி வைக்கிறாய்....
உன்னோடு வாழ்வென்பது
நரகத்துழல்வது போலாகும்...
என் லட்சியமனைத்தும்
விழலாய் வீணாகும்.....
மிச்சம் வாய்ப்பிருந்தால்
மீண்டும் சந்திக்கிறேன்...
மீளும் வழியிருந்தால்
அதுபற்றி சிந்திக்கிறேன்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.