Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-06-04T16:12:00+02:00

அதெல்லாம் ரகசியம்

Posted by கண்மணி.....

செத்து போன பாட்டியும்
கூடவேபோன தாத்தாவும்
சொல்லிட்டு போகல......

பக்கத்து வீடு அக்கா
மாமா போனப்ப்புறம்
மறுபடியும் கட்டிக்கல.....

வினுவுக்கு அம்மா இல்ல
அவன் அப்பா அத கண்டுக்கல
அவுங்க அப்பா சொல்லியும் கேக்கல....

புதுசா கட்டிகிட்ட புவனா அத்த
திரும்ப வீட்டுக்கே வரல....
ஏன்னு எனக்கும் புரில....

இதெல்லாம் காதல்னு
பெரியவுக பேசினாக....
நான் என்னனு கேட்டா
'அதெல்லாம் ரகசியம்'ன்னாக....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
V
<br /> kadhal-a evvalo alaga.....simple-a.....pechu vakkula...sollittu pora alagu....super.....kalakittena....<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog