Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-06-17T13:35:00+02:00

தனிமையில் ஓர்நாள்..........

Posted by கண்மணி.....

http://aruntechgeek.files.wordpress.com/2008/09/loneliness.jpg

அறையெங்கும்
அர்த்தமில்லா
அமைதி அலைந்தது....

உன் செல்ல
சிணுங்கள் இன்றி
என் செவிப்பறைகள்
வேலை நிறுத்தம் செய்தன....

காற்றில் அசைந்த
காகிதம்,
கடலில் ஆடும்
கப்பலை காட்டியது
நீ இல்லாததை உணர்த்தி....

சன்னல் திறக்க
ஆளில்லாததால்
சாத்தியபடியே
அழுது கிடந்தன....

நீ இல்லா
காலையில்
குயிலின் குரலும்
ஒப்பாரியாய்
ஓலமிட்டது....

விடிந்ததும்
முடிந்துபோகும்
என் கனவு,
இன்று
விடாமல்
தொடர்ந்தது...

நான்,
கண்விழிக்க செய்த
கடைசி முயற்சியும்
தோற்றது....

எனைத்
துயரில்
தூக்கிலிட்டு
தூரம் போனவளே...

தனிமையின்
ஒருநாள்
தண்டனையே
தலைநரைக்கும்
மட்டும் போதும்...
தவிக்கவிடாமல்
தானே வந்துவிடு....

இன்னும்
அனுபவிக்க
என்னிடம்
துன்பம் ஒன்றுமில்லை...

இனியும்
அழுதுபார்க்க
என்னிடம்
கண்ணீர் மிச்சமில்லை....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
R

Good!!! really nice!!!

Reply
S

Hi nice one... Pesaama nee paadalgal ezhudhi thaamarai range ku aayiralaam... ;) Don't take it in a sarcastic way... Seriously i mean it... :) Continue writing... Kudos and Cheers... :)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog