பார்த்து விட்டுப்
போன நாள் முதல்
பகலிலும்
கனவில் மிதக்கிறேன்....
'பார்க்கலாம்'
என்ற வார்த்தையில்
பரிதவித்துக்
கொண்டிருக்கிறேன்....
தம்பி குடை பிடிக்க
தங்கை ஆலம் எடுக்க
நாயகனாய் நீ நடக்க
நாணம்வந்து எனைத் தடுக்க
நிச்சயம் முடிந்தது - நெஞ்சில்
பட்சியும் பறந்தது....
மிச்சமுள்ள நேரம் மட்டும்
கட்சித் தாவல் செய்யுது....
விடியும், பொழுதும் புலரும்,
காலை மெல்ல மலரும்,
வாழும் காலம் முழுதும்,
காதல் நெஞ்சைத் தழுவும்...
மாதிவள் கழுத்தில்
மங்கள நானேறும் - என்
மானம், கற்பு அனைத்தும்
மன்னவா....
உனக்கே என்றாகும்...
இருக்கிறேன்,
கண்ணில்
கனவு மறந்து
தூக்கம் துறந்து
காத்திருக்கிறேன்....
கணவா...
அந்த
ஆனந்த நிமிடத்துக்காக....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.