Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2010-07-13T13:06:00+02:00

காதல் முத்துக்(முத்தங்)கள்....

Posted by கண்மணி.....

05053616c7465645f5fcca8687229e51e2680ffcf6914a44d117277b26.jpeg

முகக்கண்கள் வரம் பெற்றன
உன்னைக் கண்ட நேரம்.....
நகக்கண்கள் வரம் பெறுவதெப்போ?
உன்னைத் தீண்ட வேணும்...

நாம் தமிழர்...
கொடுத்த பொருளை
திருப்பி கேட்பதில்லை,
முத்தம் தவிர.....

உன் காதலையும்
என் காமத்தையும்
ஒரே சமயத்தில்
காட்டிவிட்டுப் போனது
எனக்கான உன்
முதல் முத்தம்....

தீண்ட தடை
உத்தரவிட்டதற்காகவே
காதலுக்கெதிரான
வன்முறையின் பேரில்
கைதுசெய்ய வேண்டும் உன்னை....
முத்த முன்ஜாமீன் கொடுத்து
தப்பித்துக்கொள்,
இதழ் நீதிமன்றத்தில்....

உன் உதட்டுக்கு
தொடக்கக் கல்வி மட்டும்
கொடுத்திருக்கிறாய்...
சிரிக்கிறது....

உயர் கல்வி கற்க - என்
காதல் கல்லூரியனுப்பு
முத்தப் பாடம் இலவசம்....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
A

Nice...but it for only pure lovers.....

Reply
S

Hi good one.. asaathala irukku... ;)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog