தான் பிரசவித்த
முதல் துளியை
என் விழிக்கு
பரிசளித்தது மேகம்....
மிக மெல்லிய
விரல்களால்
என் கன்னம்
வருடிச் சென்றது
தென்றல்....
தன் மனதில்
உதித்ததொரு
புதுப் பாடலை
என் காதில்
ஓதிச் சென்றது
குயில்.....
ஈர்ப்புவிசை முதல்
அறிவியல் உண்மை
அனைத்தும்
அர்த்தமற்றதாய்
ஆக்கியது
கால்கள்....
இறந்தும்
இரண்டுமணி நேரம்
இயங்குமாயினும்
மரத்தே போனது
மூளை.....
ஆயிரமாயிரம்
ஆண்டுகாலம்
அன்பை ஆளும்
இன்பம் அனுபவித்தது
உள்ளம்....
நீ
முதன் முதலில்
என்னைத்
தழுவியபோது
நான்
விழி மூடிய
ஒரு நொடியில்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.