Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-10-04T16:09:00+02:00

காதல் வலி...!!!

Posted by கண்மணி.....

http://3.bp.blogspot.com/_3_2FCxXqZPQ/SIlYDcHeGdI/AAAAAAAACIk/8Rt3CaaKTsU/s400/love-pain.jpg

 

இங்கே தான் இங்கே தான்
உன்னைக் கண்டேன்...

கண்டதுமே கண்டதுமே
காதல் கொண்டேன்...

அங்கேயே அங்கேயே
மோட்சம் கண்டேன்...

எங்கேயோ எங்கேயோ
விண்ணில் சென்றேன்.....

கண் மறைந்து
நீ பார்த்த ஒற்றை பார்வையில்
காதலின் முகவரி கண்டேன்....


உன் காலடி
தடம் பதிந்த இடம் யாவும்
காதல் காவியம் செய்தேன்.... (இங்கே தான்)

இமை மூடி இருக்கும் போது
கண்ணுக்குள் நின்று சிரிக்கிறாய்...
இதயத்தின் காதல் சொல்லாமல்
நான் மனதுக்குள்ளே மரிக்கிறேன்....


பார்வை வீசி பார்வை வீசி
பாவி நெஞ்சை பறிக்கிறாய்....
காதல் வலி தாளாமல்
நீ பறித்த நெஞ்சை எரிக்கிறேன்.... (இங்கே தான்)

 

தனியான என் பயணத்தை,
நம் காதல் நடத்தி செல்லுது...
துணையாக அது வரும் போது,
உன் நினைவெனை கொல்லுது...


என் உள்ளத்தில் நாணேற்றி
உயிரை கொல்லும் சொல்லது....
அதை காதோரம் நீ சொன்ன பின்பு
என் உயிர் போனாலும் நல்லது.... (இங்கே தான்)

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
I
<br /> why dont u try writing lyrics for film songs??<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog