Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-12-02T13:56:00+01:00

நெஞ்சுக்கு நேரமில்லை.....

Posted by கண்மணி.....

http://www.mentaljokes.com/images/heart_silver_bk.gif

உன்னை முதலில்
எங்கு கண்டேனென
அறியச் சொல்லி
ஆணையிடுகிறது
மனம் கண்ணை....

உன்னை சுமப்பதாலே
அதிகம் துடிக்கிறதென
குற்றம் சாட்டுகிறது
இதயம் என்னை ...

உன்னை
எங்கே பார்ப்பது?
என்ன பேசுவது?
எப்படி பழகுவது?
என்ற கேள்விகளுக்கு
விடை தேடியே
ஓய்ந்து விடுகிறது உள்ளம்....

உன்னுடனே என்றும்
இருப்பேனென
உறுதி கூறி
நிறைவேற்றவே
கெஞ்சுது நெஞ்சம்...

ஆனால்,
ஒன்றும் செய்வதற்கில்லை...
ஆம்,
உன்னை
காதல் செய்யவே
நெஞ்சுக்கு நேரம்போதவில்லை....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog