Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2010-12-16T12:06:00+01:00

அந்தாதி...

Posted by கண்மணி.....

(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை...
வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி...
இருவரும் காதல் கொண்டு மணந்தனர்...
மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...)

கவிதை அரங்கேறும் நேரம்:

இளவரசி பல்லக்கில் இருக்கிறாள்...
இவன் குதிரையில் காவலாய் வருகிறான்....
இதயம் இரண்டும் பேசுகின்றன,
இறைவன் கோவில் செல்லும் வழியில்...

km2a.jpg

பல்லக்கில் செல்வதென்ன?
பால்வண்ண பைங்கிளியோ...
பாவையுந்தன் மேனியது
பகலிலும் வரும் நிலவோ?

நிலவென்னய்யா?
நிதம் தேயும் வளரும்...
நானும்  நீயும்
வானும் நீலமன்றோ....

நீலமே நீயானால்
நீள்கடலுக்கும் உரித்தாவாய்
உடலின் உதிரமென்பேன் - உன்
உயிரில் உயிர்கரைவேன்...

கரைந்துபோனால், நான்
கலங்கிப் போகேனோ... உயிர்
கலந்து கரைசேர்வோம், கவலை
மறந்து விண்சேர்வோம்....

விண்சேர்ந்தென்ன செய்ய?
கண் சேராது போனபின்....
மண் புதைந்து போவேன் - இந்த
பெண் சேராது போயின்...

போனதும் வந்ததும்
போய்சேர்ந்த தடமெங்கே?
பொய்யறியா பெண்ணிவளை - நீ
விட்டுசென்ற இடமெங்கே?

இடமொன்று தடையிலை
இனியவளே உனைச்சேர
இப்போழ்தே இணைவோம்
இறைவனவன் சந்நிதியில்...

(கோவில் அடைகின்றனர்)

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S

மறக்க முடியாத அத்யாயங்கள்... செழுமையான கற்பனை...

Reply
R

Very Nice

Reply
M

///விண்சேர்ந்தென்ன செய்ய?
கண் சேராது போனபின்....
மண் புதைந்து போவேன் - இந்த
பெண் சேராது போயின்...///

சில நேரம் என் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு வரி கொடுக்கப்பட்டுள்ளன இங்கே...மகிழ்ச்சி

Reply
K

mikka nandri Bala n Dinakaran... :)

Reply
D

vazhuka kaaviya kadhal mikavum nerthiya kaiyanndullirigal

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog