Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-12-23T16:05:00+01:00

காதல் காலம்...

Posted by கண்மணி.....

http://digestive.niddk.nih.gov/ddiseases/pubs/hirschsprungs_ez/images/pregnant.jpg

கருவுற்ற சேதிதனை
கணவா உனக்குரைத்த
கணம்தனிலே
கண்டுகொண்டேன்
காதல் இன்னதென்று....

கனவுக்குள்ளும்
கால்கள் தரைதொடாது
கனிவாய் தாங்கும்
கைகளிலே
கண்டுகொண்டேன்
காமம் பொய் என்று....

மசக்கையின் போதும்
மாதம் ஆன பின்பும்
மடியோடணைத்து
உறங்கச்செய்யும் உன்னில்
கண்டுகொண்டேன்
உறவே வரம் என்று....

குழந்தை உதைப்பதும்
குரல்கேட்டு அசைவதும்
கூடி உணர்ந்து
சிலிர்க்கையில்
கண்டுகொண்டேன்
தாய்மை உனக்குமென்று....

உன் கருவதனை
நான் சுமக்க
என் காயமதை
நீ சுமக்க
கர்ப காலம் முழுதும்
காதல் காலம் ஆகாதோ...

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
K

Thanks Dhina, Bala n Prem... :)

Reply
P

Awesome poem... :)

Reply
B

குழந்தை உதைப்பதும்
குரல்கேட்டு அசைவதும்
கூடி உணர்ந்து
சிலிர்க்கையில்
கண்டுகொண்டேன்
தாய்மை உனக்குமென்று.......super :)

Reply
D

nice line

un karuvathanai nan summakka en kayamathai nee sumakka karpa kalam muzhuvathu kathal kalam aakatho!!!!!!

mikavum arumaiya ullathu!
kruvai sumppaval pen enralum avalai anbadu thanguvathu avl purusan enpathai
mikavum nayamaka eduthuraithirkal.........

nice........

Reply
I

Kandipa maten.. indha kavidhaya en idhayathil copy paste panniten..

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog