Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-02-14T07:18:00+01:00

காதல்...

Posted by கண்மணி.....

வெற்றிடம் தேடி
நிரப்பும் காற்றைப் போல
நம்மைச் சுற்றி நிரம்பியது
காதல்....

உயிர் சொல்லி
உள்ளம் செய்யும் தவம்
காதல்.....

மணல்வெளியாய்
நானிருக்க
மழை துளியாய்
உயிர் நனைக்க வந்தது
காதல்....

கண் வாசல்
முற்றுகையிட்டு
இதையக்கோட்டை
சுற்றிவளைத்து
உயிர் ராஜ்ஜியம்
கைப்பற்றும் உன்னத போர்
காதல்....

இமயம் தாண்டி உயர்ந்து
வானம் தாண்டி வளர்ந்து
கவிதையில் தன்னை பதிவு செய்து
காவியமாய் தன்னை உணரச் செய்து
காலம் கடந்து வாழ்வது
காதல்....

உனக்காக நானும்
எனக்காக நீயும்
அன்றிலாய் வாழ
இன்றியமையாதது
காதல்...

உள்ளம் ஓயும் வரை
உடல் சாயும் வரை
உயிர் தீயும் வரை
காதலிக்கலாம், வா....

காதலைக் கொண்டாட
கவிஞகள் தேவையில்லை...
காதலர்கள் வேண்டும்....
காதலிக்கலாம், வா....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T

//கண் வாசல்
முற்றுகையிட்டு
இதையக்கோட்டை
சுற்றிவளைத்து
உயிர் ராஜ்ஜியம்
கைப்பற்றும் உன்னத போர்
காதல்.... //

Simply superb yaar :)

Reply
B

காதலைக் கொண்டாட
கவிஞகள் தேவையில்லை...
காதலர்கள் வேண்டும்....
காதலிக்கலாம், வா...

Reply
G

Nicely craved a love feel !!!

Reply
J

really nice .... gud try!!!

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog