Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2011-03-31T07:10:00+02:00

காதல் தந்தது உன்னையென...

Posted by கண்மணி.....
உன்னோடு பேசும்
என் வார்த்தைகளை
கவனமாய்
தேர்ந்தெடுக்கிறேன்...
உன் மீதான
என் காதலை
உனக்கு
உணர்த்தவேண்டுமென
அதை
உணர்த்துவது
நானென்று
நீ உணரக்கூடாதென...

என் உள்ளத்தின்
கடவுச்சொல்லாய்
உன்னையே
நிர்ணயித்திருக்கிறேன்
நீ அறியாமலே....
நிச்சயம் ஓர்நாள்
கண்டுபிடித்து
உள்நுழைவாயென.....

எல்லா பயணத்திலும்
என்னுடனே இருப்பதாய்
எண்ணிக் கொள்கிறேன்...
பார்த்து ரசிக்கும்
காட்சியனைத்தும்
உன்னுடனே
பகிரவேண்டுமென....

இணைந்து நடக்கும்
இன்ப தருணங்களில்
எதேச்சையாய் கூட
தொட்டுவிடாமல்
எச்சரிக்கையாய் இருக்கிறேன்....
நீயாய் கைதொடும்
நிமிடத்திற்கான
காத்திருப்பின்
கனம் கூடட்டுமென....

காதலையும்
காதலுடன்
காதலிக்கிறேன்....
காதலை
தந்தது நீயென...
காதல்
தந்தது உன்னையென...

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T

//காதலையும்
காதலுடன்
காதலிக்கிறேன்....
காதலை
தந்தது நீயென...
காதல்
தந்தது உன்னையென... //

chance less words :)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog