Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-05-12T15:04:00+02:00

முத்து முத்தம் போடவா…. :)

Posted by கண்மணி.....

மொழியை விட
உன் மௌனமே
நிறைய காதல் பேசுகிறது….
குறிப்பாக முத்த பொழுதுகளில்….  ;)

கன்னத்தில் தருவதாய் தான்
நமக்குள் ஒப்பந்தம்….
உதட்டில் தவறி விழுந்தால்
அதற்கு முழுக்க முழுக்க
காதலே பொறுப்பு…. :)

நம் உதடுகள்
நசுங்கவே
இத்தனை யுகமாய்
முத்தம் வளர்த்து
காத்திருக்கிறது
காதல்…. :)

உன்னை
அழகாக தூண்டுவதும்
என்னை
அளவாக தீண்டுவதும்
முகத்திற்கும்
முத்ததிற்குமான
கண்ணா மூச்சி ஆட்டம்…. :)

நீ
தருவதாக கூறி
ஏமாற்றும்
ஒவ்வொரு முறையும்
உன் உதட்டிற்கெதிரான
என் முத்த தாக்குதல்
எல்லை தாண்டும்…
எச்சரிக்கிறேன்… ;)

உன் விழி வானில்
காதல் மேகங்கள்
அதிகமாக
காணப்படுவதால்,
இன்று
முத்த மழை
பரவலாக பெய்யுமென
எதிர்பார்க்கப்படுகிறது…. ;)

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S

after long time was going thru ur blog....i loved this one ;) awesome uma!! :) terrific! :)

Reply
T

உன் விழி வானில்
காதல் மேகங்கள்
அதிகமாக
காணப்படுவதால்,
இன்று
முத்த மழை
பரவலாக பெய்யுமென
எதிர்பார்க்கப்படுகிறது….//

அருமையான காதல் அறிக்கை :)

Reply
B

ada da!!

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog