எனக்கு
தெரிந்தேதானிருந்தது….
நீ
என்னை நேசிக்கத்
தொடங்கியிருக்கிறாயென….
உனக்கு தெரியுமா
இல்லையாஎன
தெரிந்து கொள்ளவே
தெரியாதவளாய் இருந்தேன்
நீயாய் தெரியப்படுத்தும்வரை….
********************************************************************
நடக்காதென
தெரிந்திருந்தும்
நீ நேசிக்க
தயங்கவில்லை….
நடக்கவே முடியாதென
புரிந்திருந்தும்
உன் நேசத்தை
தடுக்கவில்லை….
********************************************************************
என் கணவனாகும்
தகுதி உனக்கிருப்பதை
ஆயிரம் முறை
உணர்த்திய நீ,
உன் மனைவியாகும்
அதிர்ஷ்டம் எனக்கில்லைஎன
ஒருமுறையேனும்
உணர்ந்திருக்கலாம்…..
********************************************************************
‘ஏன் முடி வெட்டின?’
‘எப்போயிருந்து கண்மை போடற?’
‘கொலுசு மாத்திட்ட போல?’
‘இந்த ஜிமிக்கி ஒடஞ்சு போச்சுன்னு சொன்ன?’
‘கொஞ்சம் குண்டாய்ட்ட’
மூன்றாண்டுகளுக்குப் பிறகு
முகம்பார்த்த போது
உனதிந்த கேள்விகள்தான்
உணர்த்தின
என் மீதான
உன் நேசத்தையும்
அது இன்னும்
உயிரோடிருப்பதையும்….
********************************************************************
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.