Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-07-28T12:38:00+02:00

என் வலி உணர்….

Posted by கண்மணி.....

http://3.bp.blogspot.com/_W4nmyYReGUk/Sxo6w-ozjYI/AAAAAAAAAhQ/_kQG3jB9Wa4/s400/LONELY-GIRL-Poster-B12141197.jpeg

வட்டிலிலிட்ட சோறு
வாயில் படாமல்
வாடி வதங்கிப்போகிறேன்
‘வா சாப்டலாம்’ என்ற
வார்த்தை நீ தராமல்…..

சிரிக்க மறந்து
சிந்தனை மறந்து
சிதிலமடைந்து போகிறேன்
சின்ன சின்ன சண்டை
எதுவுமில்லாமல்…..

அலைபேசியும்
ஆதரிப்பாரின்றி
அநாதையாகிப் போகிறது
‘அமு’ என்றவுன்
அழைப்பு வராமல்…..

எதிர்படுபவர்கள்
ஏதேனும் கேட்குமுன்
எச்சரிக்கையோடிருக்கிறேன்
எப்போதும் போல நீ
என்னருகே இல்லாமல்…..

ஒருநாளும் ஒருபொழுதும்
ஒரு பயமும், கவலையும்
அணுகாது காத்தாய்
அது பொய்த்துப்போயின்
போவேன் ஒன்றுமில்லாமல்…..

நானாய் வேண்டிக்கொண்ட இப்பிரிவு
வானாய் நீண்டு போக பூமிக்கு
வீணாய் வாழ்கிறேன் - அன்புகூர்ந்து
காணாய் என்அகதி நிலை…

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
B

அலைபேசியும்
ஆதரிப்பாரின்றி
அநாதையாகிப் போகிறது
‘அமு’ என்றவுன்
அழைப்பு வராமல்

Im waiting for ur name...to flash in my cell fone
Im hearing ur voice...when im all alone

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog