Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

2010-03-29T12:41:00+02:00

உன் மௌனம்....

Posted by கண்மணி.....

என் காதல் அலை வீசும் போது கடலாய் உன் மௌனம்.... என் கற்பனைக் குதிரை பறக்கும் போது கடிவாளமாய் உன் மௌனம்.... என் இளமைத் தென்றல் வீசும் போது நாணலாய் உன் மௌனம்...... என் மோகத் தீ எரியும் போது நீராய் உன் மௌனம்..... என் இரவுத் தேர் ஓடும் போது கனவாய் உன் மௌனம்.......

Read more

2010-03-22T15:02:00+01:00

நமக்குள் ஒன்றும் இல்லை....

Posted by கண்மணி.....

சந்திக்கிறோம் பிரிகிறோம் நமக்குள் எந்த வருத்தமும் இல்லை......... நெருங்குகிறோம் விலகுகிறோம் நமக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லை......... சேர்ந்து இருக்கிறோம் தனித்து நிற்கிறோம் நமக்குள் எந்த சலனமும் இல்லை....... தொட்டுகொள்கிறோம் விட்டுவிடுகிறோம் நமக்குள்...

Read more

2010-03-18T07:59:00+01:00

நம் காதல்.....

Posted by கண்மணி.....

உன்னை தேடும் ஒவ்வொரு முறையும் தொலைந்து போகிறேன் நான்.....! அனால் ஒவ்வொரு முறையும் கிடைத்து விடுகிறது நம் காதல்..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2010-02-16T15:01:00+01:00

காதல் என்ற பேரிலே.....

Posted by கண்மணி.....

நிஜமான நேசம் புரியாத பாசம் அறியாத ஆர்வம் அகலாத நெருக்கம் அடங்காத ஆசை அழியாத அன்பு தணியாத தவிப்பு விடியாத இரவு முடியாத கனவு பேசாத வார்த்தை கூசாத பார்வை வீசாத தென்றல் சேராத இமைகள் பிரியாத இதழ்கள் துடிக்காத இதயம் இவை அனைத்தும் தந்தது நீ தான்.... காதல் என்ற...

Read more

2010-01-22T09:33:00+01:00

இப்போதாவது புரிந்துகொள்...............

Posted by கண்மணி.....

ஊரில் திருவிழா..... எல்லோரும் கோவில் செல்கின்றனர், அம்மனை தரிசிக்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீடு தேடி ஓடி வருகிறேன்..... வீட்டில் பூஜை..... எல்லோரும் கண் மூடி கை கூப்புகின்றனர் கடவுளை வணங்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீட்டு ஜன்னல் பார்க்கிறேன்........

Read more

2010-01-08T07:08:00+01:00

உன்னை விட அழகானவள் நீ...........!

Posted by கண்மணி.....

'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க'னு நான் சொன்னதுக்கு 'பொய் சொல்லாத'னு சிணுங்கியவளே...! நான் சொல்வதெல்லம் உண்மை உண்மை தவிர வேறில்லை .... நான் பொய் சொன்னால் முரைத்து பார்க்கும் போது எவ்வளவு அழகு தெரியுமா நீ நான் மழையில் நனைந்தால் திட்டியபடியே துவட்டும் போது என்...

Read more

2009-12-15T12:21:00+01:00

என் காதல்.....!

Posted by கண்மணி.....

நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்....! நான் உன் பெயரை கோடி முறை ஜெபித்திருந்தாலும் நீ என் பேர் சொன்ன அந்த நொடியில் தான் முதல் பூ பூத்தது என் காதல்....! நான் உன்னிடம் கனவிலும் நினைவிலும்...

Read more

2009-12-07T10:27:00+01:00

ஆற்றாமை ............!

Posted by கண்மணி.....

மனசுல ஒன்ன வச்சேன்- உம்ம உசுருல என்ன வச்சேன் கைல கைய வச்சு- எனக்கு காதல சொன்ன மச்சான்.... வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் நிக்குதைய்யா..... வீதியில வாரதெல்லாம் உம்மொகமா தெரியுதைய்யா..... கஞ்சி தண்ணி கொறயில்ல காசு பணம் கொறயில்ல நெஞ்சு செத்து போச்சே...

Read more

2009-12-05T11:01:00+01:00

நீ.................!

Posted by கண்மணி.....

என் மனம் நிலமாய் அதில் விழுந்த நல் விதையாய் நீ............! என் விழி மலராய் அதில் விழுந்த பனித்துளியாய் நீ.............! என் மொழி தேனாய் அதில் விழுந்த முக்கனியாய் நீ.................! என் கனவு பாலையாய் அதில் வந்த நன் நீராய் நீ.........! என் கவிதை சொல்லாய்...

Read more

2009-11-25T09:45:00+01:00

காதலன்றி வேறென்ன?

Posted by கண்மணி.....

மாலை மயங்கும் பொழுதில் மழை சிந்தும் குளிரில் மாட முற்றத்தில் நீ தந்து நான் அருந்தும் தேநீரில்..... நீண்ட பயணத்தில் இரவு நேரத்தில் எதிரெதிர் இருக்கையில் நீ அனுப்பி நான் சிலிர்க்கும் பார்வையில்.... தாளாத தலை வலியில் தாய் போன்ற உன் மடியில் தானாக எனை ஏந்தி...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog